மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி |
சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல காமெடி ஷோக்களில் பங்கேற்று வருபவர் காமெடி நடிகர் கே.பி.ஒய்.பாலா. சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த இவர், தற்போது ‛காந்தி கண்ணாடி' என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஷெரிப் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்திருக்கிறார்.
பாலாவுடன், இயக்குனர் பாலாஜி சக்திவேல், அமுதவாணன், நிகிலா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற செப்டம்பர் ஐந்தாம் தேதி திரைக்கு வர இருப்பதாக இன்றைய தினம் ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளார் கே.பி.ஒய்.பாலா.
அதோடு, ஒவ்வொரு கனவிற்கும் ஒரு நாள் உண்டு. என்னுடைய கனவு நனவாகப்போகிறது. எனது முதல் படத்தின் வெளியிட்டு தேதியை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். காந்தி கண்ணாடி படம் செப்டம்பர் 5-ல் வெளியாகிறது. அன்று திரையரங்குகளில் சந்திப்போம் என்றும் பதிவு அவர் போட்டுள்ளார்.