சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

கொலை கொலயாக முந்திரிக்கா, வல்லமை தாராயோ, மூணே மூணு வார்த்தை படங்களை இயக்கிய மதுமிதா அடுத்து இயக்கிய படம் கேடி என்கிற கருப்புதுரை. வீட்டை விட்டு துரத்தப்பட்ட ஒரு முதியவரின் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் ஒரு சிறுவனின் கதை.
இந்த படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் நிறைய விருதுகள் எதிர்பார்தேன். இது ஏமாற்றம் அளிக்கிறது என்று மதுமிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ‛‛கேடி என்கிற கருப்புதுரையின் பயணம் இனிமையானது. அன்புக்கும் அங்கீகாரத்திற்கும் நன்றி. தேசிய விருதுகளில் இன்னும் கூடுதலான விருதுகளை பெறாததில் எங்களுக்கு வருத்தம் இல்லை என்று சொன்னால் அது அப்பட்டமான பொய். ஏனென்றால் எல்லா அம்மாக்களுக்கும் அவர்கள் குழந்தைகள் தகுதியானவர்கள் தான்'' என்று எழுதியிருக்கிறார்.




