இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வரும் எதிர்நீச்சல் தொடர் 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக கடந்துள்ளது. கோலங்கள் போல மெஹா ஹிட் தொடராக இன்னும் சில ஆண்டுகள் தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது திடீரென கிளைமாக்ஸை எட்டியுள்ளது.
இந்நிலையில், இந்த தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம்பிடித்த நாயகி மதுமிதா, எதிர்நீச்சல் தொடர் முடியப்போவதை குறித்து மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'எல்லோருக்கும் இது இதயம் நொறுங்கும் தருணம், ஆனாலும் எது நடந்தாலும் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து தான் போக வேண்டும். வித்யா, திருச்செல்வம் ஆகியோருக்கு மிக்க நன்றி. ஜனனி போன்ற முக்கியமான ரோலை என்னை நம்பி கொடுத்ததற்கு. என்னுடைய சக நடிகர்களுக்கும் குழுவினருக்கும் நன்றி' என அதில் தெரிவித்துள்ளார்.