விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் | 8 ஆண்டுகளுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் கயல் சந்திரன் | இணைந்து நடிக்கும் தாயும், மகளும் | பிளாஷ்பேக் : வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தி குடும்பத்தை காப்பாற்றிய நடிகர் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை ஏமாற்றிய 'குமாரி' | ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் |
சரவணன் மீனாட்சி தொடரில் ஜோடியாக நடித்த மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா நிஜ வாழ்விலும் ஜோடியாக இணைந்தனர். இவர்களுக்கு 10 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் தேவ் என்ற மகன் பிறந்திருக்கிறார். இந்நிலையில், இவர்கள் இருவரும் விவகாரத்து பெற இருப்பதாக அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தது. அதுகுறித்து தற்போது பேட்டி ஒன்றில் பேசியுள்ள ஸ்ரீஜா, 'உண்மையில் எங்களுக்குள் அவ்வளவு சண்டைகள் நடந்துள்ளது. பல மோசமான சண்டைகளை எதிர்கொண்டோம். இப்போதும் சண்டை போட்டு கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், மகன் பிறந்திருப்பதால் சண்டைக்கு அதிக நேரம் கிடைக்கவில்லை. சில நேரங்களில் சண்டை போடும் போது பிரிந்துவிடலாமா என்று கூட யோசித்து இருக்கிறோம். ஆனால், அதையும் மீறி அவரிடம் பேச வேண்டும் என்று எனக்கு தோன்றும். என்னை பொருத்தவரை அதை நான் ஒரு மேஜிக் என்று சொல்வேன். உங்கள் உறவில் அந்த மேஜிக் வந்துவிட்டதால் போதும் என்ன ஆனாலும் அந்த உறவு நம்மை விட்டு போகாது' என்று கூறியுள்ளார்.