இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி | பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன் | ஆஸ்பத்திரியில் ரோபோ சங்கர் : அவர் உடல்நிலை எப்படி இருக்கிறது | திரிஷ்யம் படத்தின் கிளைமாக்ஸ் ஆக நான் முதலில் எழுதிய காட்சி வேறு ; ஜீத்து ஜோசப் | இயக்குனருக்கு தெரிவிக்காமலேயே ரீ ரிலீஸுக்கு தயாராகி வரும் மம்முட்டியின் 'சாம்ராஜ்யம்' | ஹேக் செய்யப்பட்ட மொபைல் போன்கள் ; உபேந்திரா-பிரியங்கா தம்பதி விடுத்த எச்சரிக்கை | பிரதமர் மோடிக்கு, ரஜினி, கமல், இளையராஜா பிறந்தநாள் வாழ்த்து | 'காந்தாரா சாப்டர் 1' டப்பிங்கை முடித்த ருக்மிணி வசந்த் | 'கூலி' பைனல் வசூல் அறிவிக்கப்படுமா ?, ரசிகர்கள் எதிர்பார்ப்பு | காதலுக்காக பாலினத்தை மாற்றும் ஜோடி: 'சரீரம்' படக்கதை இதுதான் |
சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், காக்கி சட்டை, தனுஷ் நடித்து கொடி, பட்டாசு போன்ற படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். அதையடுத்து சூரி நடிப்பில் கருடன் என்ற படத்தை கடந்தாண்டு இயக்கியவர், தற்போது லெஜென்ட் சரவணன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதையடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் துரை செந்தில்குமார். இப்படத்தில் ஏற்கனவே அவர் இயக்கிய கருடன் படத்தில் நடித்த சசிகுமாரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஏஸ், டிரெய்ன் படங்களை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, அதையடுத்து பூரி ஜெகந்நாத் இயக்கும் படத்தில் நடிப்பவர், அந்த படத்தை முடித்ததும் துரை செந்தில் குமார் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.