ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது கோவை, அதன் சுற்றுவட்டாரம் மற்றும் கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திலும் அதே டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கும் நிலையில், அவரது மருமகளாக முதல் பாகத்தில் நடித்த மிர்னா மேனன் மீண்டும் நடித்து வருகிறார். அதேபோல் ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்த ரம்யா கிருஷ்ணனும் இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.
இது குறித்த தகவலை அவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும், ஜெயிலர்-2 படப்பிடிப்பில் கடந்த பத்தாம் தேதி தான் கலந்து கொண்டதாகவும், அதே நாள்தான் ரஜினியுடன் தான் இணைந்து நடித்த படையப்பா படத்தின் 26வது ஆண்டு நாள் என்றும் தெரிவித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன், படையப்பா 26வது ஆண்டு நாளில் மீண்டும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினியுடன் இணைந்தது மகிழ்ச்சி என்றும் பதிவிட்டுள்ளார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனனை தொடர்ந்து யோகி பாபுவும் ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த அதே வேடத்தில் நடிக்கும் நிலையில், எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருக்கிறார்.