நடிகர் தனுஷ் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் ' நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' . இதில் அவரின் அக்கா மகன் பவிஷ் நாராயணன் என்பவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் நடித்தனர்.
ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்றன. படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதை படம் பூர்த்தி செய்யவில்லை. இதனால் படம் சுமாரான வசூலை பெற்றது.
இந்நிலையில் பவிஷ் அடுத்து கதாநாயகனாக நடிக்க தனுஷ் ஒருபுறம் கதை கேட்டு வருகிறார். மறுபுறம் 20க்கும் மேற்பட்ட இயக்குனர்களரிடம் கதை கேட்டுள்ளார் பவிஷ். இந்த படத்தையும் தனுஷ், அவரது வுண்டர் பார் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பார் என்கிறார்கள்.