சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

பா.பாண்டி, ராயன் ஆகிய படங்களுக்கு பிறகு தனுஷ் இயக்கியுள்ள படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' . இதில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர் என இளைஞர்கள் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற பிப்ரவரி 21ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இதன் டிரைலர் இன்று வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த மாரி செல்வராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி, "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தைப் பார்த்தேன். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு வழக்கமான காதல் கதையை திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்த வழக்கமான காதல் கதையில் தனுஷ் உருவாக்கியிருக்கும் உலகம் என்னை மிகவும் குதூகலப்படுத்தியது. இந்த குதூகலமும், உற்சாகமும் படத்தை திரையரங்குகளில் பார்க்கும் அனைவருக்கும் கிடைக்கும் என நினைக்கிறேன். வாழ்க்கையின் அதீத மகிழ்ச்சிகள் அனைத்தும் காதல் என்ற அப்பாவிதனத்தால் தான் கிடைக்கிறது. இயக்குனர் தனுஷூக்கு எனது வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.




