மனைவியுடன் இணைந்து நடிப்பேன் : ஆதி | தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி கட்டிடம் : அரசாணை புதுப்பிப்பு | கபில் சர்மா சம்பளம் 5 கோடி? | சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை: ஷங்கரின் விளக்கம் என்ன? | டிக்கெட் கட்டணம், இரட்டை வரி விதிப்பில் மாற்றம் வருமா? | தியேட்டரில் வெளியாகும் அனுஷ்காவின் 'காதி' டிரைலர் | சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் ராஜ்குமார் ராவ் | ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சாய்ரா பானு! | மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்த சமந்தா! | 'டிராகன்' - பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….. |
ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்த படம் லால் சலாம். இதில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்தார். ஆனால் இந்த படம் வெற்றி பெறவில்லை. அதையடுத்து ஐஸ்வர்யா ரஜினி அளித்த ஒரு பேட்டியில், லால் சலாம் படம் சம்பந்தப்பட்ட முக்கிய ஹார்ட்டிஸ்க் தொலைந்து விட்டது. அதில் தான் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அந்த காட்சிகள் படத்தில் வைக்கப்பட்டிருந்தால் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் படம் திரைக்கு வந்து பல மாதங்களுக்கு பிறகு அந்த ஹார்ட்டிஸ்க் கிடைத்துவிட்டதாக கூறினார் ஐஸ்வர்யா ரஜினி. இதனால் அப்போதே புதிய காட்சிகளுடன் லால் சலாம் படம் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில், சமீபத்தில் ஹிந்தியில் லால் சலாம் படத்தின் தொலைக்காட்சி பிரிமியர் நடந்துள்ளது. அதையடுத்து விரைவில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் கூறுகிறார்கள் . இந்த லால் சலாம் படம் 2024 ம் ஆண்டு பிப்ரவரி 9ல் திரைக்கு வந்தது. இன்றோடு ஓராண்டு ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.