பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியான படம் ‛புஷ்பா 2'. இதன் முதல் பாகம் 400 கோடி வசூலித்த நிலையில், 2வது பாகம் உலகளவில் 1830 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. படத்தின் வெற்றிக்கு வித்திட்ட படக்குழுவினர், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அல்லு அர்ஜூன், இயக்குனர் சுகுமார் குறித்து உருக்கமாக பேசினார்.
அல்லு அர்ஜூன் பேசுகையில், ‛‛சுகுமாருக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை. நன்றி மட்டும் அவருக்கு போதுமானது அல்ல. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் சரியான பங்களிப்பைக் கொடுத்தால் மட்டுமே இயக்குனருக்கு வெற்றி கிடைக்கும். ஒரு படத்தின் பாடல் வரிகள், இசை என எதுவாக இருந்தாலும் அது இயக்குனரின் மேற்பார்வையில் தான் இருக்கும். ஆனால், அதன் வெற்றி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தான் செல்லும். அனைத்துக்கும் சுகுமாருக்கு நன்றி'' எனப் பேசினார் அல்லு அர்ஜூன்.
அல்லு அர்ஜூனின் பேச்சைக்கேட்ட சுகுமார் கண்கலங்கினார். இதனை பார்த்த அல்லு அர்ஜூன், ‛‛நீங்களும் கண்கலங்கி என்னையும் கண்கலங்க வைக்காதீர்கள்'' என கேட்டுக்கொண்டார். மேலும், ‛‛இந்த படத்தின் வெற்றியை எனது ரசிகர்களுக்கு உரித்தாக்குகிறேன். இன்னும் அவர்களை பெருமைப்படுத்துவேன். புஷ்பா 3 பற்றி எனக்கும் சுகுமாருக்கும் தெரியாது. அப்படத்தின் மீதிருக்கும் எனர்ஜியை உணர்கிறேன்,'' என்றும் பேசினார்.