பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

படங்கள் வெற்றி பெறுகிறதோ இல்லையோ வாராவாரம் படங்கள் அதிகளவில் வெளியாகின்றன. இந்தாண்டில் ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகின. இவற்றில் 12 ஆண்டுகளாக முடங்கி இருந்த ‛மத கஜ ராஜா' படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூப்பர் ஹிட்டானது.
பிப்ரவரி மாதத்தில் கடந்தவாரம் பெரிய நடிகரின் படமாக அஜித்தின் விடாமுயற்சி, தமிழகம் முழுக்க அனேக தியேட்டர்களில் வெளியானது. ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது. ஆனாலும் இன்னும் ஒருவாரமாவது இந்தபடம் தியேட்டர்களில் தாக்குபிடிக்க வாய்ப்புள்ளது.
இந்தச்சூழலில் இந்தவாரம் பிப்., 14ல் காதலர் தினத்தை முன்னிட்டு, ‛‛2கே லவ் ஸ்டோரி, பயர், காதல் என்பது பொதுவுடமை, ஒத்த ஓட்டு முத்தையா, படவா, தினசரி, கண்நீரா, 9 ஏஎம் டூ 9 பிஎம் வேலண்டைன்ஸ் டே, அது வாங்கினால் இது இலவசம், பேபி அண்ட் பேபி” ஆகிய 10 நேரடி படங்கள் வெளியாகின்றன. இதுதவிர மார்வெல் ஸ்டுடியோஸின் ‛கேப்டன் அமெரிக்கா பிரேவ் நியூ வேர்ல்டு' என்ற ஹாலிவுட் படமும் வெளியாகிறது.
இவற்றில் 2 கே லவ் ஸ்டோரி படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார். ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் கவுண்டமணி நடித்துள்ளார். தயாரிப்பாளர் சதீஷ் குமார் பயர் படத்தை இயக்கி உள்ளார். காதல் என்பது பொதுவுடமை படத்தில் நடிகை லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ளார். படவா படத்தில் விமலும், தினசரி படத்தில் ஸ்ரீகாந்தும், பேபி அண்ட் பேபி படத்தில் ஜெய் நடித்துள்ளனர். இதுதவிர ஹாலிவுட் படங்களுக்கு குறிப்பாக மார்வெல் படங்களுக்கு என்றே இந்தியாவில் தனி ரசிகர் கூட்டம் உள்ளதால் இந்த படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு உள்ளது
இருப்பினும் விடாமுயற்சி படம் அதிகளவில் தியேட்டர்களில் ஓடுவதால் இத்தனை படங்களுக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்குமா என்பது தெரியவில்லை. இதனால் கடைசிநேரத்தில் சில படங்கள் வெளியீட்டில் இருந்து விலக வாய்ப்புள்ளது.