பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்', தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' (சுருக்கமாக 'நீக்') ஆகிய படங்கள் கடந்த மாதம் பிப்ரவரி 21ம் தேதி ஒரே நாளில் தியேட்டர்களில் வெளியாகின.
இரண்டு படங்களில் 'டிராகன்' படம் பெரும் வெற்றியைப் பெற்று 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அஜித் நடித்து வெளிவந்த 'விடாமுயற்சி' படத்தின் வசூலையும் கடந்து இந்த ஆண்டில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையைப் பெற்றது.
அதே சமயம், 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்திற்கு குறிப்பிடும்படியான வரவேற்பு கிடைக்கவில்லை. போட்ட பட்ஜெட் அளவிற்குக் கூட படம் வசூலிக்கவில்லை என்றே சொல்கிறார்கள். இந்தப் படத்தை தனுஷ் எதற்கு இயக்கினார் என்று கேட்டவர்களும் உண்டு.
தியேட்டர்களில் ஒரே நாளில் வெளியான இந்த இரண்டு படங்களும் ஓடிடி தளத்திலும் ஒரே நாளில் மார்ச் 21ம் தேதி வெளியாகின்றன. 'டிராகன்' படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும், 'நீக்' படம் அமேசான் பிரைம் தளத்திலும் வெளியாகின்றன.