போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் படம் 'வாடிவாசல்'. சில ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட படம் இது. ஆனால் சூர்யா, வெற்றிமாறன் இருவரும் அவர்களின் மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த படம் தள்ளிப்போனது.
கடந்த சில மாதங்களாக இப்படத்தின் தொழில்நுட்ப காட்சிகள் சம்மந்தப்பட்ட பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மற்றொருபுறம் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடல்களுக்கு இசையமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றார். ஏற்கனவே இந்த படத்தை ஜூன் மாதத்தில் துவங்குவதாக தாணு ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இதன் படப்பிடிப்பை தற்போது வருகின்ற ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி அன்று தொடங்குவதாக வெற்றிமாறன் தாணுவிடம் தெரிவித்துள்ளார் என்கிறார்கள். காரணம் படத்தின் திரைக்கதை பணிகள் இன்னும் முடியாததால் படப்பிடிப்பு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாம்.