அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு கடந்த வாரம் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளன்று வெளியானது. பான் வேர்ல்டு படமாக உருவாக உள்ள இப்படத்தில் மேற்கத்திய ரசிகர்களையும் கவரும் விதத்தில் உள்ள நடிகைகளை கதாநாயகியாக நடிக்க வைக்க ஆலோசனை நடந்து வருகிறதாம். அவர்கள் கிளாமராகவும் நடிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஒரு தகவல்.
தற்போதைக்கு அதிகமான கிளாமர் காட்டி நடிக்கும் ஒரு நடிகையாக ஜான்வி கபூர் இருக்கிறார். ஜுனியர் என்டிஆர் ஜோடியாக 'தேவரா' படத்தில் நடித்தவர், தற்போது ராம் சரண் ஜோடியாக 'பெத்தி' படத்தில் நடித்து வருகிறார். அதனால் அவர்தான் முதல் தேர்வாக இருக்கிறார் என்கிறார்கள்.
படத்தில் அல்லு அர்ஜுன் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார் என்பதால் மற்றொரு கதாநாயகியும் வேண்டும். அட்லியின் நெருக்கமான நட்பில் உள்ளவர் சமந்தா. அதனால், அவர் தேர்வாகலாம் என்கிறார்கள். 'புஷ்பா' படத்தின் முதல் பாகத்தில் 'ஊ சொல்றியா' என்று கெட்ட ஆட்டம் போட்டவர் சமந்தா. அப்படத்தின் வெற்றிக்கு அந்தப் பாடலும் ஒரு காரணம். அவரும் கிளாமர் காட்டத் தயங்க மாட்டார். அதே சமயம், இன்னும் சில பாலிவுட் நடிகைகளும் தேர்வில் இருக்கிறார்களாம்.