‛துப்பாக்கி 2': ஐடியா பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் | சிரிக்க முடியாத நகைச்சுவை நடிகர்கள்!: மதுரை முத்து | ‛ஓ.ஜி' படத்திலிருந்து பிரியங்கா மோகன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! | ‛திரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல் இதோ! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் புதிய கூட்டணி! | பராசக்தி படத்தில் இணைந்த அப்பாஸ்! | மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் |
வானொலி நிகழ்ச்சி வர்ணனையாளாரக மக்கள் மனதில் இடம்பிடித்த மிர்ச்சி செந்தில் அதன்பின் சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகராக செந்திலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். சரவணன் மீனாட்சி தொடரில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஸ்ரீஜா நடிக்கவில்லை. குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார். செந்தில் ஜீ தமிழில் அண்ணா தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், செந்தில் தற்போது புதிதாக கபே பிசினஸில் இறங்கியிருக்கிறார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், 'திருவல்லாவில் கபே ஒன்று விலைக்கு வந்தது. ஸ்ரீஜா அதை வாங்கி நடத்தலாம்னு சொன்னாங்க. நானும் ஓகே சொல்லிட்டேன். ஆனால், வேலை அதிகமாயிடுச்சு. முன்னாடி படப்பிடிப்பு முடிஞ்சதும் வீட்டுக்கு போய்டுவேன். இப்ப கேரளாவுக்கு சென்று கபே வேலைகளை பார்க்க வேண்டியிருக்கு. மற்றபடி நிர்வாகம் அனைத்தும் ஸ்ரீஜா தான் பாத்துகிறாங்க' என அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.