ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு |
மக்களின் அமோக வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் தொடரின் சீசன் 2 மிக விரைவில் வெளியாகவுள்ளது. இதில் ஹீரோயின் உட்பட பல நடிகர்கள் மாறிவிட்டனர். ஜனனியாக நடித்து வந்த மதுமிதாவுக்கு பதிலாக பார்வதி, ஐஸ்வர்யாவாக நடித்து வந்த ஐஸ்வர்யாவுக்கு பதில் ஜானு என தாராவாக நடித்து வந்த சிறுமிவரை பல நடிகர்கள் மாற்றம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் விசாலாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சத்யாப்ரியா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'நான் எதிர்நீச்சல் தொடரில் நடிக்கவில்லை என்றால் யாராவது வருத்தப்படுவீர்களா? யார் என்னை மிஸ் செய்ய போகிறீர்கள்' என்று கேட்டிருந்தார். இதனைதொடர்ந்து ரசிகர்கள் பலரும் சத்யப்ரியா நடிக்க வேண்டும் என்று கேட்க, அடுத்ததாக வெளியிட்டுள்ள பதிவில் நான் இல்லாமல் எதிர்நீச்சல் சீரியலா? என கெத்தாக கேட்டுள்ளார். இதன்மூலம் விசாலாட்சி கதாபாத்திரத்தில் சத்யப்ரியா தொடர்ந்து நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.