சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் அமோக வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் தொடர் பல காரணங்களுக்கிடையே சிக்கி விரைவிலேயே முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் ஹீரோயினாக ஜனனி என்ற வேடத்தில் நடித்த மதுமிதாவிற்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்கள் மதுமிதாவை மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்க சொல்லி கேட்க, தற்போது ரசிகர்களின் ஆசை நிறைவேறும் வகையில் மதுமிதாவும் தமிழிலேயே புதிய சீரியலில் கமிட்டாகியிருக்கிறாராம். ஜீ தமிழில் அண்மையில் அடுத்தடுத்து இரண்டு சீரியல்களுக்கு எண்ட் கார்டு போட்டுவிட்ட நிலையில் புதிய சீரியல்கள் அந்த இடத்தை பிடிக்க வருகின்றன. அதில் ஒரு சீரியலில் தான் மதுமிதா என்ட்ரி கொடுத்திருப்பதாக சின்னத்திரை வட்டாராங்களில் செய்திகள் பரவி வருகிறது.