ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
ஐந்து மாநிலங்களில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் நடிகை ஷகிலா, காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டுள்ளார். அவர் அளித்த பேட்டி : பெண்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். நடிகை என்பதை தாண்டி ஒரு தனி அடையாளம், தனி அதிகாரம் பெற விரும்புகிறேன். நல்லது செய்யவும் பவர் வேண்டும். எனது தேவைக்காக மட்டுமே அரசியலுக்கு வரவில்லை.
காங்கிரசில் இருந்து குஷ்பு விலகியதால், அந்த இடத்தை நிரப்புவதற்காக நான் வரவில்லை. குஷ்புவுடன் என்னை ஒப்பிட வேண்டாம். எனக்கு அவர் சீனியர். காங்கிரசில் நான் இணைந்தது போல, இந்த கட்சியில் இருந்து அவர் விலகிச் சென்றதற்கும் ஒரு காரணம் இருக்கும்.
கட்சித் தலைமை அனுமதி அளிக்கும் பட்சத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். அரசியல் ஒருபுறம் இருந்தாலும் எனது சினிமா பயணம் தொடரும். என்னிடம் நிறைய கேள்வி கேட்காதீர்கள் அரசியலுக்கு இப்போதுதான் வந்திருக்கேன். கொஞ்சம் கொஞ்சமாக பல விஷயங்களை கத்துக்கிட்டு இருக்கேன். இனி என் ஆட்டத்தை போகப்போக பார்ப்பீர்கள் என்றார்.