மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா | பிரியதர்ஷனின் ‛ஹைவான்' ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் | ராமன் தேடிய சீதை, பாட்ஷா, குடும்பஸ்தன் - ஞாயிறு திரைப்படங்கள் | இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் |

எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார் மதுமிதா. தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள மதுமிதா, தற்போது விபத்து ஒன்றில் சிக்கியுள்ள சம்பவம் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் மதுமிதா தனது நண்பர் ஒருவருடன் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் காரில் சென்றுள்ளார். இவர்கள் சென்ற கார் ஒருவழிப்பாதையில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வந்த பைக் மீது இவர்கள் சென்ற கார் மோதியதாக தெரிகிறது. இதில் போலீஸ் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை மதுமிதா அவரது நண்பர் இருவரும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மதுமிதா மீது பள்ளிக்கரணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.