ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி | என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் |

லொள்ளு சபா நிகழ்ச்சியில் பிரபலமாகி சினிமாவுக்கு வந்தவர் மதுமிதா. ஒரு கல் ஒரு கண்ணாடி, காஷ்மோரா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல படங்களில் அவர் காமெடி வேடத்தில் நடித்துள்ளார். அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதுமிதா அந்நிகழ்ச்சியில் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டு பாதியிலேயே வெளியேறினார். மதுமிதா கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அவரது கணவர் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது மதுமிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். அதையடுத்து சினிமா வட்டாரத்தை சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.