இயக்குனர் சசி உடன் இணையும் நடிகர் சசிகுமார்! | கவுதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் இணைந்த விஷால்! | ரஹ்மானின் முன்னாள் மனைவி என சொல்லாதீர்கள்: சாய்ரா பானு வேண்டுகோள் | நடிகை பிந்து கோஷ் காலமானார் | தமிழகத்தில் 1000 தியேட்டர்களில் வெளியாகும் அஜித்தின் ‛குட் பேட் அக்லி' | முதலில் பேபி அடுத்து பேப்! அமலாபால் வெளியிட்ட வீடியோ பதிவு | 'பராசக்தி' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் | நயன்தாரா - விக்னேஷ் சிவனின் பிரம்மாண்ட ஹோம் ஸ்டுடியோ! | வெளியீட்டிற்குத் தயாரான சமந்தாவின் முதல் தயாரிப்பு 'சுபம்' | சம்பளத்தை உயர்த்த கமிஷன் வெட்டும் டிராகன் |
சினிமாவில் பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மதுமிதா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமான அவர் தற்போது பிரபல சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார். இனியா என்ற தொடர் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, இந்த தொடரில் திரைக்கதையின் சுவாரசியத்தை மேலும் கூட்டும் வகையில் அதிரடி போலீஸாக வீட்டிற்குள் நுழைந்து காமெடி கலாட்டா செய்ய உள்ளார் மதுமிதா. இனியா தொடரில் நடிப்பது குறித்து மதுமிதா கூறும்போது 'ஆல்யா மற்றும் ரிஷியுடன் சேர்ந்து நடிக்க ஆர்வமாக உள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர்களுக்கு நன்றி. இந்த தொடரில் எனது சிறந்த நடிப்பை ரசிகர்களுக்கு வழங்குவேன்' என்று கூறியுள்ளார்.