பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

2012ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. ஆனால் அதன்பிறகு தமிழில் படங்கள் இல்லாததால் தெலுங்கு, ஹிந்தி என்று நடிக்கத் தொடங்கிய பூஜா, தற்போது முன்னணி நடிகை பட்டியலில் இணைந்து விட்டார். டோலிவுட்டில் இவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது.
இந்நிலையில், மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்க சரியான சந்தர்ப்பம் பார்த்து வந்த இவர், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 65ஆவது படத்தில் இணைந்து விட ஆரம்பத்தில் இருந்தே முயற்சி எடுத்து வருகிறார். இதற்கிடையே சுல்தான் பட நாயகியான ராஷ்மிகா மந்தனாவும், விஜய் படத்திற்காக முயற்சித்து வந்தார். இதனால் விஜய் படத்தில் நடிக்கப்போவது ராஷ்மிகாவா? பூஜாவா என்கிற குழப்பம் நீடித்தது.
ஆனால் தற்போதைய நிலவரப்படி, பாலிவுட்டில் பிசியாகி விட்ட ராஷ்மிகாவினால் விஜய் படத்திற்கு கேட்ட தேதிகளை கொடுக்க முடியவில்லையாம். அதனால் தற்போது பூஜா ஹெக்டேவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துப்பட்டுள்ளதாம். அதனால் இன்னும் சில தினங்களில் விஜய் 65ஆவது படத்தில் பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி விட்ட தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.




