ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
புதுமுகங்களை வைத்து படத்தைத் தயாரித்து வெளியிடும் போது அந்தப் படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக வசூலைக் குவிப்பதென்பது எப்போதாவது ஒரு முறைதான் நடக்கும். தெலுங்குத் திரையுலகத்தில் அப்படி ஒரு வசூலை அள்ளிக் குவித்து வருகிறது 'உப்பெனா' படம்.
வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த 'உப்பெனா' தெலுங்குப் படம் கடந்த வாரம் வெளியானது. படத்திற்கு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அறிமுக நாயகன், நாயகியின் நடிப்பு, நம்ம ஊர் விஜய் சேதுபதியின் நடிப்பு, தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை, இயக்குனர் புஜ்ஜி பாபுவின் உணர்வுபூர்வமான இயக்கம் என படத்திற்கு பல விஷயங்கள் ஆதரவாக அமைந்துவிட்டது. அதனால் தெலுங்கு ரசிகர்கள் புது நடிகர்கள் என்றும் பாராமல் தியேட்டர்களுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
படம் வெளியான மூன்று நாட்களிலேயே சுமார் 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்துவிட்டதாம். நேற்று திங்கள் கிழமை கூட 4 கோடிக்கும் மேல் வசூல் வந்துவிட்டது என்கிறார்கள்.
இதனால் படம் நிச்சயம் சூப்பர்ஹிட் என டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் யதார்த்த நடிப்பை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்களாம். இதனால், அவருக்கு தெலுங்கில் பல வாய்ப்புகள் தேடி வரும் என்று தகவல்.