பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேகிறாரா ரவீந்தர்? | பா.விஜய் இயக்கத்தில் ஜீவா- அர்ஜுன் நடிக்கும் 'அகத்தியா' | ஒரு டிரைலரிலேயே முழு படத்தைக் காட்டிய 'சிங்கம் அகைன்' டிரைலர் | 69வது படத்திற்காக விஜய் பின்னணி பாடிய ஒன் லாஸ்ட் சாங்! | மைசூரு தசரா விழாவில் இளையராஜா, ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி | முதன்முறையாக ரீமேக் ; கொள்கையை தளர்த்திய சூர்யா பட தயாரிப்பாளர் | பிரபல தாதாவுடன் தொடர்பு ; போலீசாரின் விசாரணை வளையத்தில் 'பிசாசு' நடிகை? | தினசரி லப்பர் பந்து நாயகியின் காலை தொட்டு வணங்கும் கணவர் | சுந்தரி நடிகைக்கு திடீர் திருமணம் | இயக்குனரின் படமாக இருக்குமா ரஜினியின் 'வேட்டையன்'? |
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த மலையாளப் படம் ஹெலன். அப்பா மகள் உறவுடன் க்ரைம் திரில்லர் கலந்த படமாகி உருவாகி வெற்றி பெற்றது. இதில் அப்பாவாக லாலும், மகளாக அன்னா பென்னும் நடித்தார்கள்.
தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகி வருகிறது. இதில் அப்பா கேரக்டரில் அருண் பாண்டியனும், மகள் கேரக்டரில் அவரது மகள் கீர்த்தி பாண்டியனும் நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. தற்போது படத்திற்கு அன்பிற்கினியாள் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இது ஹீரோயின் கீர்த்தி பாண்டியனின் கேரக்டர் பெயர். படத்தை கோகுல் இயக்கி வருகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: அப்பா, மகள் இருவரையும் மையப்படுத்திய கதைகளுடன் பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்பா, மகள் இருவரையும் மையப்படுத்திய த்ரில்லர் கதை என்றால் மிகவும் அரிதானது தான். அப்படியொரு படம் இது. அப்பா, மகள் வாழ்வியலைச் சொல்லும் கதையில் நிஜ அப்பா, மகள் நடித்தால் எப்படியிருக்கும்...? அந்தக் காட்சிகளின் நம்பகத்தன்மை அனைத்துமே இன்னும் உணர்வுப்பூர்வமாக இருக்கும். அருண் பாண்டியன் - கீர்த்தி பாண்டியன் இருவரும் இந்தக் கதையில் அப்பா, மகள் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையிலான காட்சிகள் பார்வையாளர்களை ஒன்ற வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. என்றார்.