பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
சமீபத்தில் துணை இயக்குனர் சாக்ரட்டீசை திருமணம் செய்து கொண்ட ஆனந்திக்கு திருமணத்துக்கு பிறகுதான் வாய்ப்புகள் குவிகிறது. அவர் நடித்து வருகிற 19ம் தேதி வெளிவரவுள்ள கமலி பிரம் நடுக்காவேரி படத்தில் அவரது நடிப்பை பற்றி இண்டஸ்ட்ரி முழுக்க பேச்சாக இருக்கிறது. இந்த நிலையில் அவர் நடித்து வரும் படம் ஒன்றுக்கு நதி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஏமாலி, லிசா உள்ளிட்ட படங்களில் நடித்த சாம் ஜோன்ஸ் தயாரித்து, நடிக்கும் படம் இது. மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கி உள்ளார். சாம் ஜோன்ஸ், ஆனந்தியுடன் தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி, ஏ.வெங்கடேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார், திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மதுரையை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.