என் வாழ்வில் மாற்றம் ஏற்பட யார் காரணம்? : சிவகார்த்திகேயன் 'ஓப்பன் டாக்' | ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் | ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் |
தெலுங்குத் திரையுலகத்தில் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்து இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது 'உப்பெனா'. புச்சிபாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த இப்படம் வெளிவந்து ஒரு வாரமாகி உள்ளது. இந்த ஒரு வாரத்தில் 70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு புதுமுகங்கள் நடித்து வெளிவந்த படம் எதுவும் இந்த அளவிற்கு வசூல் செய்ததில்லையாம். சில தினங்களுக்கு முன்பு படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தையும் நடத்திவிட்டார்கள். படக்குழுவினர் சில ஊர்களில் தியேட்டர்களுக்கும் சென்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வந்தார்கள்.
இப்படத்தில் நடித்துள்ள வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி ஆகியோருக்கு தெலுங்கில் அடுத்து நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே தமிழில் நிறைய படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி இனி தெலுங்கிற்காகவும் தனது தேதிகளை ஒதுக்க வேண்டி வரும்.
இயக்குனர் புச்சிபாபுவிற்கு தெலுங்கில் அதிக டிமான்ட் ஏற்பட்டுவிட்டதாம். உணர்சிச்சிபூர்வமாக படத்தைக் கொடுத்த அவரை பல தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு வருகிறார்களாம்.