யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் | நாகசைதன்யா - சோபிதா குறித்து அவதூறு : மகளிர் ஆணையத்தில் மன்னிப்பு கேட்ட ஜோதிடர் | இரண்டு வருடம் முடிவதற்குள்ளேயே விவாகரத்தை அறிவித்த அபர்ணா வினோத் | ஜன., 26ல் விஜய் 69 முதல் பார்வை வெளியாக வாய்ப்பு | ஹனிரோஸ் புகாரில் சிறை சென்ற செல்வந்தருக்கு உதவி செய்த ஜெயில் அதிகாரிகள் சஸ்பெண்ட் | தனது அநாகரிக செயலுக்கு மன்னிப்பு கேட்ட ஜெயிலர் வில்லன் |
புச்சி பாபு சனா இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வைஷ்வ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த தெலுங்குப் படம் 'உப்பெனா'.
இப்படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தெலுங்குத் திரையுலகத்தில் ஒரு புதுமுகம் நடித்து வெளிவந்த படம் கொரானோ காலகட்டத்திலும் ரூ.100 கோடி வசூலித்தது சாதாரண விஷயமல்ல என்ற மகிழ்ச்சியில் இருக்கிறது தெலுங்குத் திரையுலகம்.
இப்படத்தைப் பார்த்த மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டினர்.
தியேட்டர் வசூலில் மட்டும் ரூ.100 கோடியைக் கடந்த இப்படத்தின் ஓடிடி உரிமை கூட பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. படத்தில் அறிமுகமான வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி ஆகியோருக்கு பல புதிய பட வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் நடிகரான விஜய் சேதுபதியும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார். அவரைத் தேடியும் பல தெலுங்குப் பட வாய்ப்புகள் வருகிறதாம்.
தெலுங்குத் திரையுலகில் கொரானாவிற்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் வெளியான ஒரு படம் ரூ.100 கோடி வசூலைப் பெறுவது இதுவே முதல் முறை.