நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
குணசேகர் இயக்கத்தில் சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'சகுந்தலம்'. இப்படத்தில் சமந்தாவின் ஜோடியாக துஷ்யந்தன் ஆக மலையாள நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார். காளிதாஸ் எழுதிய சகுந்தலம் தான் திரைப்படமாகிறது. மன்னர் துஷ்யந்தன் மற்றும் சகுந்தலை இடையேயான காதல் கதைதான் 'சகுந்தலம்'. விசுவாமித்திரர் மற்றும் மேனகைக்கு மகளாகப் பிறந்தவர்தான் சகுந்தலம்.
இப்படத்தில் நடிப்பதற்காக தேவ் மோகன் கடந்த மூன்று மாதங்களாக குதிரையேற்ற பயிற்சி, வாள்வீச்சுப் பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொண்டாராம். தெலுங்கு மொழியைக் கற்றுக் கொள்ளவும் பயிற்சி எடுத்துள்ளாராம்.
“துஷ்யந்தன் அவருடைய அழகான தோற்றத்தால் அறியப்படுபவர். அவர் எங்கு சென்றாலும் அவருடைய அழகில் பெண்கள் மயங்குவார்கள். நம்மில் யாருக்கும் துஷ்யந்தன் எப்படி இருப்பார் என்று தெரியாது. இதற்கு முன்பு மக்களுக்குத் தெரிந்த நடிகராகவோ, ஒரு குறிப்பிட்ட இமேஜ் உடையவராகவோ இருக்கும் ஒருவரைத் தேர்வு செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். கடைசியாகத்தான் தேவ் மோகனைத் தேர்வு செய்தோம்,” என்கிறார் இயக்குனர் குணசேகர்.
மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ள தேவ் மோகன் 'சகுந்தலம்' மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 20ம் தேதி முதல் நடைபெற உள்ளது.