'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமா உலகில் விஜய் டிவியிலிருந்து வந்து இன்று முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் சந்தானம், சிவகார்த்திகேயன். அவர்களது வரிசையில் அடுத்ததாக 'குக் வித் கோமாளி' புகழ் இடம் பெறுவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு அந்நிகழ்ச்சியில் தன்னுடைய நகைச்சுவை மூலம் முத்திரை பதிப்பவர் புகழ்.
சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கினார் புகழ். ஒரு காலத்தில் காரை வாஷிங் செய்து கொடுத்தால் எனக்கு 10 ரூபாய் டிப்ஸ் தருவார்கள், இன்று நானே ஒரு காரை வாங்கியுள்ளேன், மகிழ்ச்சியாக இருக்கிறது என கார் வாங்கியது பற்றி வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார் புகழ்.
தன்னுடைய புதிய காரை நடிகர் சந்தானத்திடம் காட்டி வாழ்த்து பெற்றார். அவரது காரை ஓட்டிப் பார்த்த சந்தானம் அடுத்து பிஎம்டபிள்யூ, ஆடி கார்னாலும் வாங்கித் தருவேன், இப்ப காருக்கு முன்னாடி வைக்க வினாயகர் சிலை வாங்கித் தரேன் என ஒரு வெள்ளி விநாயகர் சிலையைப் பரிசாகக் கொடுத்துள்ளார். அதை உடனே தன்னுடைய காரில் ஒட்டிவிட்டார் புகழ்.
தன்னைப் போலவே டிவியிலிருந்து வளர்ந்து வரும் புகழை சந்தானம் வாழ்த்தியதை ரசிகர்கள் வரவேற்றுள்ளார்கள்.