குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
சாஹோ படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து வருகிறார் நடிகர் பிரபாஸ். இதில் ராதே ஷ்யாம் படம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது.. ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் தாண்டி விட்டது. இந்தநிலையில் தற்போது பிரபாஸின் இன்னொரு படமான 'சலார்' படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.
முதல் நாள் படப்பிடிப்பு கோதாவரிக்கரையில் நடைபெற்றது. முதல்நாளே ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதேசமயம் சூட்டோடு சூடாக, பிரபாஸ் படப்பிடிப்பில் பங்கேற்கும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் லீக்காகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுபோன்று வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு எச்சரித்துள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் கேமராவுக்கு மிக அருகில் நின்று பிரபாஸை வீடியோ எடுத்துள்ளதால், தற்போது யூனிட்டில் உள்ளவர்களிடமும் பாதுகாப்பு கெடுபிடிகளை அதிகரித்துள்ளது.