தாஷமக்கான் தலைப்புக்கு என்ன அர்த்தம் | பிளாஷ்பேக்: வரதட்சணை கொடுமைக்கு எதிரான முதல் படம் | ‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! |

தமிழ்த் திரையுலகில் 2006ம் ஆண்டு வெளிவந்த 'சிவப்பதிகாரம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ். அதன்பின் 'குரு என் ஆளு, தடையறத் தாக்க,' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
சுமார் 15 வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழில் நடிக்க ஆரம்பித்துள்ளார். பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் 'ஊமை விழிகள்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கடுத்து விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் 'எனிமி' படத்திலும் ஆர்யா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இத்தனை வருட இடைவெளியில் மீண்டும் கதாநாயகியாக நடிக்க வருவது ஆச்சரியமான விஷயம்தான். கடந்த வருடம் வெளிவந்த 'பாரன்சிக்' மலையாளப் படத்தில் மம்தாவின் நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
மலையாளத்தில் பல படங்களில் நடித்துள் மம்தா சிறந்த பாடகியும் கூட. தமிழில் விஜய் நடித்து வெளிவந்த 'வில்லு' படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான 'டாடி மம்மி வீட்டிலில்ல' பாடலைப் பாடியவர் மம்தா தான். பின்னர் 'கோவா' படத்திலும் பாடியிருக்கிறார்.




