தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டதும் விஜய் நடித்த 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் தான் ரீஎன்ட்ரி ஆனார். அந்தப் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
தற்போது 'ஆச்சார்யா' என்ற நேரடித் தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. அதற்கடுத்து மலையாள 'லூசிபர்' ரீமேக், தமிழ் 'வேதாளம்' ரீமேக் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார். இதனிடையே, அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்க ஆர்வமாக உள்ளாராம். அப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை ஏற்கெனவே சிரஞ்சீவியின் தயாரிப்பு நிறுவனம் தான் வாங்கி வைத்துள்ளதாம்.
தற்போது திட்டமிட்டுள்ள படங்களை முடித்துவிட்டு அந்தப் படத்தைச் செய்யலாம் என யோசித்து வருகிறாராம். நேரடிப் படங்களை விட ரீமேக் படங்கள் கொஞ்சம் சிக்கல் இல்லாமல் இருக்கும் என்பதுதான் அதற்குக் காரணம் என்கிறார்கள்.