பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கால்ஷீட் சொதப்பலுக்கு பேர் போன சிம்பு, மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம்' படத்தில் நல்லபிள்யைக நடித்து முடித்ததை தொடர்ந்து சுந்தர்.சி. இயக்கத்தில் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கு ரீ-மேக்காக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஐதராபாத்தில் நவம்பர் 30 வரை படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைகிறது. சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு பாடல்காட்சிக்காக வெளிநாடு செல்ல இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அந்த டிரைலருக்கு டப்பிங் பேசும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் சிம்பு!
'லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பாக நவம்பர் 29-ஆம் தேதி உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் வெளியாக இருக்கிறது ரஜினியின் '2.0'. 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் டிரைலரை ரஜினியின் '2.0' படத்துடன் வெளியிட லைகா திட்டமிட்டுள்ளது.
'விரைவில் வந்தா ராஜாவாதான் வருவேன் டிரைலர்...' என்று லைகா நிறுவனம் டுவீட் செய்திருக்கிறது. எனவே இந்த டிரைலர் '2.0' படம் வெளியாகும் அன்று வெளியாக வாய்ப்பிருக்கிறது.