ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'தக் லைப்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் செர்பியாவில் நடைபெற்றது. தற்போது தேர்தல் களத்தில் கமல் பிஸியாக இருப்பதால் தக் லைப் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கால்ஷீட் பிரச்னை காரணமாக இந்த படத்திலிருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி வெளியேறியதாக தகவல்கள் வெளியானது. இதனால் இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் படக்குழுவினர் பேசி தற்போது மீண்டும் தக் லைப் படத்தில் நடிக்க துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு படப்பிடிப்பையும் இவர்களின் கால்ஷீட்டிற்கு ஏற்றபடி நடத்த படக்குழுவினர் சம்மதம் சொல்லி உள்ளனர். மேலும் சிம்பு இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்கிறார்கள்.