''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கடந்த டிசம்பர் இறுதியில் நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். அவர் தனது மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்த சகாப்தம் என்கிற படத்தில் தான் கடைசியாக நடித்தார். அதன்பிறகு இயக்குனர் விஜய் மில்டன், விஜய் ஆண்டனியை வைத்து தான் இயக்கி வந்த மழை பிடிக்காத மனிதன் என்கிற படத்தில் விஜயகாந்த்தை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க போவதாக அறிவித்து அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் விஜயகாந்தின் உடல்நிலை காரணமாக கடைசி வரை அவரால் தான் நினைத்ததை செய்ய முடியாமலேயே போனது. அது குறித்த வருத்தத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (ஏஐ) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலமாக மீண்டும் விஜயகாந்த்தை திரையில் கொண்டு வர இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. விஜய்யை வைத்து தற்போது கோட் என்கிற படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு ஏற்கனவே அதில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன் என விஜய்யுடன் ஒரு வித்தியாசமான நட்சத்திர கூட்டணியை இணைத்து உருவாக்கி உள்ளார். இந்த நிலையில் தான் விஜயகாந்த்தையும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்ற வைக்க இருக்கிறார். இது குறித்த தகவல் ஏற்கனவே கசிந்த நிலையில் சமீபத்தில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் இதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு பலமுறை எங்களது வீட்டிற்கு வந்து சண்முக பாண்டியனை சந்தித்து விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் நடிக்க வைப்பது குறித்து பேச வேண்டும் என்பதற்காக என்னை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். பிரச்சாரத்திற்கு இடையே ஒருநாள் சென்னை வந்தபோது அவர் என்னை சந்தித்து முழு விவரங்களையும் சொன்னார். விஜய், வெங்கட் பிரபு இருவரையுமே சிறு வயதில் இருந்தே நான் பார்த்து வருகிறேன். விஜயகாந்த் இருந்தால் எப்போதுமே விஜய்க்கு நோ சொல்ல மாட்டார். தேர்தல் முடிந்ததும் விஜய்யும் என்னை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பிறகு இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.