ஸ்ரீலீலாவை 'ஓவர் டேக்' செய்த ரஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் | ஒரே ஆண்டில் 80 கோடி வரி செலுத்தி விஜய் சாதனை | கனடா நாடாளுமன்றத்தில் கருணாசுக்கு கவுரவம் | கன்னட நடிகை ஷோபிதா மரணம் | தமிழ் ஹீரோக்களுக்கு சறுக்கலைத் தந்த சரித்திரப் படங்கள் | ‛காந்த கண்ணழகி' பெயர் சில்க் ஸ்மிதாவிற்கு தான் பொருந்தும்... - கனவாய் கலைந்து போன கவர்ச்சி தாரகை | பிளாஷ்பேக்: வேஷமிட்டு வாய்ப்பைப் பெற்ற ஜெமினிகணேசன் | டிசம்பர் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான் ; உற்சாகத்தில் ராஷ்மிகா |
கன்னட திரையுலகத்தைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் துவாரகீஷ் நேற்று காலமானார். 81 வயதான இவர் இதயம் செயலிழந்த நிலையில் மரணத்தை தழுவியுள்ளார். திரையுலகை சேர்ந்த பலரும் அவரது மறைவுக்கு தங்களது இரங்கலையும் அஞ்சலியையும் செலுத்தி வரும் நிலையில் அவரது மிக நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த் இவரது மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “என்னுடைய நீண்டநாள் நண்பரான துவாரகீஷின் மரணம் எனக்கு ரொம்பவே வேதனை அளிக்கிறது. ஒரு நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை துவங்கி ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளராக, பின்னர் இயக்குனராக தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டவர் துவாரகீஷ். அவருடனான பல நினைவுகள் என் மனதில் வந்து செல்கின்றன. அவருடைய குடும்பத்தாருக்கும் அவரை நேசிப்பவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
துவாரகீஷின் முழு பெயர் பங்கில் சாமா ராவ் துவாரகநாத் என்பது தான். சினிமாவுக்காக அதை துவாரகீஷ் என மாற்றிக் கொண்டார். கடந்த 1964ல் வீர சங்கல்பா என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான துவாரகீஷ் சில படங்களில் நடித்த அனுபவத்தை கொண்டு அடுத்த இரண்டு வருடங்களிலேயே பட தயாரிப்பிலும் இறங்கினார்.
கன்னடம், தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 50 படங்களை தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த அடுத்த வாரிசு படத்தை தயாரித்ததன் மூலமாக தமிழில் நுழைந்த இவர் பின்னர் 1985ல் இயக்குனராகவும் மாறி 2001 வரை கிட்டத்தட்ட 19 படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக தமிழில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான நான் அடிமை இல்லை படத்தை இயக்கியது இவர்தான். தமிழில் வெற்றி பெற்ற மலையூர் மம்பட்டியான் படத்தை இந்தியில் ரஜினிகாந்தை வைத்து 'கங்க்வா' என்கிற பெயரில் ரீமேக் செய்து தயாரித்தார்.
பெரும்பாலும் இவர் ஹிந்தியில் வெற்றி பெற்ற படங்களை தமிழ் மற்றும் கன்னடத்திலும், அதேப்போல தமிழில் வெற்றி பெற்ற படங்களை ஹிந்தியிலும் கன்னடத்திலும் ரீமேக் செய்து மிகப்பெரிய வெற்றிகளை பெற்றவர். கடந்த 2012ல் பிரியாமணி இரட்டை வேடத்தில் நடித்து ஹாரர் படமாக வெளியான சாருலதாவை தயாரித்ததும் இவரது நிறுவனம்தான்.
2018ல் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தையும், கன்னடத்தில் அம்மா ஐ லவ் யூ என்கிற பெயரில் ரீமேக் செய்து தயாரித்தார். கடைசியாக 2019ல் கன்னடத்தில் ஆயுஸ்மான் பவ என்கிற படத்தை இவர் தயாரித்திருந்தார். ஒரு நடிகராகவும் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார் துவாரகீஷ்.
இவருக்கு அம்புஜா, ஷைலஜா என இரண்டு மனைவிகள்.. ஆறு குழந்தைகள்.. இதில் இவரது முதல் மனைவி அம்புஜா கடந்த 2021ல் இதே ஏப்-16ம் தேதி தான் காலமானார் என்பது ஆச்சர்யமான ஒன்று.