நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛மிடில் கிளாஸ்' : டீசர் வெளியீடு | இன்றைய ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர் : யாமி கவுதம் | மிரட்டலின் பேரிலேயே ஜாய் உடன் திருமணம்: குழந்தையை கவனிக்க தயார்: மாதம்பட்டி ரங்கராஜ் | ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு | தி ராஜா சாப் ரிலீஸ் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம் | கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி | ஒரே நேரத்தில் திரிஷ்யம் 3 மூன்று மொழிகளில் ரிலீஸா? : தெளிவாக குழப்பும் ஜீத்து ஜோசப் | 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி தி எபிக்' | விஷால் மீது 'மகுடம்' முன்னாள் இயக்குனர் ரவி அரசு புகார் | மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படும் துருவ் |

தனது அழகாலும், நடிப்பாலும் தென்னிந்திய ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை சவுந்தர்யா 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (ஏப்ரல் 17) இதே மாதிரியான ஒரு தேர்தல் காலத்தில் தீவிர பிரச்சாரம் செய்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.
ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில், கார்த்திக் ஜோடியாக தமிழில் 'பொன்னுமணி' படத்தில் அறிமுகமானார் சவுந்தர்யா. தொடர்ந்து அருணாச்சலம், படையப்பா போன்ற படங்களில் ரஜினிக்கும், காதலா காதலா படத்தில் கமல்ஹாசனுக்கும், தவசி, சொக்கத்தங்கம் ஆகிய படங்களில் விஜயகாந்துக்கும் ஜோடியாக நடித்திருந்தார் . கன்னடம், மலையாளம், தெலுங்கு தனது எல்லைகளை விரிவாக்கினார்.
முன்னணியில் இருந்தபோதே பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்திருந்த சவுந்தர்யா, தன் சகோதரர் அமர்நாத் உடன் கரீம் நகரில் இருந்து பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் பயணித்தார். அப்போது விபத்து ஏற்பட்டது. இதில் சவுந்தர்யா, அமர்நாத், ஹெலிகாப்டரை இயக்கிய விமானி உள்ளிட்ட அந்த விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர்.
அவர் உயிரிழப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பு தன்னை அறிமுகப்படுத்திய ஆர்.வி.உதயகுமாரிடம் பேசி உள்ளார். இதுகுறித்து ஆர்.வி. உதயகுமார் ஒரு முறை கூறும்போது, திடீரென எனக்கு சவுந்தர்யாவிடமிருந்து போன் வந்தது. அப்போது, சினிமாவில் அவர் நடிக்க வாய்ப்பளித்து உதவியதற்கு நன்றியை தெரிவித்த அவர், இந்த உதவியை காலம் உள்ளவரை நான் மறக்க மாட்டேன் என்று மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். இன்றைக்கு நான் வானத்தில் பறப்பதற்கு நீங்கள்தான் காரணம் என்று கூறினார். ஏன் சவுந்தர்யா இப்படி எல்லாம் பேசறே, என்னாச்சு உனக்கு என்றும் அவரிடம் கேட்டேன். இல்ல சார் ஏதோ பேசணும்னு தோணியது அதனால் பேசினேன் என்று கூறி போனை வைத்தார். அடுத்த 2 மணி நேரத்தில் அவர் விபத்தில் இறந்த செய்தி எனக்கு கிடைத்தது. நான் அதிர்ச்சி அடைந்தேன்” என்றார்.