ஸ்பிரிட் படத்தில் வில்லன் ஆக விவேக் ஓபராய் | 'கர' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ், ஐசரி கணேஷ் | டாக்சிக் முதல் பாடல் மார்ச் 2ல் வெளியாகிறது | தமிழ் வெப் சீரிஸ்களில் முன்னணி நடிகர்கள் | தமிழ் சினிமாவில் தொடரும் விவாகரத்து… | விஜய்சேதுபதி, மணிகண்டன் கூட்டணியில் முத்து என்கிற காட்டான் : டீசர் வெளியீடு | ரோபோ சங்கர் இறுதி சடங்கு : உருக்கமாக பேசிய விமல் | நடிகை பலாத்கார வழக்கு : திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு | பிளாஷ்பேக்: ஆஸ்தான இயக்குனருக்காக கவுரவ தோற்றத்தில் நடித்த சிவாஜி | அரசியல் படத்தில் அபர்ணதி |

கடந்த 2010ம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜஸ்வர்யா ராய், பிரித்விராஜ், பிரபு, பிரியாமணி ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'ராவணன்'. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற அளவிற்கு வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனாலும், இன்றளவிலும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் படமாக ராவணன் உள்ளது.
சமீபகாலமாக தமிழகத்தில் ரீ ரிலீஸ் கலாச்சாரத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ராவணன் படத்தை நாளை ஏப்ரல் 17ந் தேதி சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருப்பூர் போன்ற சில ஊர்களில் உள்ள திரையரங்குகளை தேர்ந்தெடுத்து ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.