ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை |
கோபி நயினார் இயக்கிய அறம் படத்தில் நடித்தவர் நயன்தாரா. அந்த படத்தில் அவர் நடித்திருந்த கலெக்டர் வேடம் நயன்தாராவின் இமேஜை உயர்த்தியதோடு, அவர் கொடுத்திருந்த பர்பாமென்ஸ் அவரை மேலும் பேச வைத்தது.
இதனால் மீண்டும் கோபி நயினாரின் இயக்கத்தில் நடிக்க தயாராகி விட்டார் நயன்தாரா. அதன் காரணமாக தற்போது அடுத்த படத்திற்கான கதை வேலைகளில் தீவிரமடைந்துள்ளார் கோபி நயினார். ஆனால் இந்த படம் அறம்-2 என்று சொல்லப்பட்டு வருவதால், முந்தைய படத்தின் தொடர்ச்சியான கதையில் நயன்தாரா நடிப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோபி நயினார் தரப்பை கேட்டால், இந்த படத்தின் டைட்டீலை தற்போதைக்கு அறம்-2 என்கிறோம். ஆனால் படத்தின் கதை முந்தைய படத்தின் தொடர்ச்சி அல்ல. இந்த படமும் சமூக நோக்கமுள்ள கதைதான் என்றாலும், இதில் நயன்தாரா நடிக்கும் கதாபாத்திரம் அறம் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்கிறார்கள். இந்த அறம்-2 படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.