பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்க தீவிரம் காட்டி வருகிறார். தன் மன்றத்தை பலப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதேசமயம், தான் நடித்து முடித்துள்ள 2.O மற்றும் காலா பட வேலைகளும் மும்முரமாய் நடந்து வருகின்றன.
இதில் ஷங்கர் இயக்கத்தில், உருவாகியுள்ள 2.O படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் பலமாதங்களாக நடந்து வருகின்றன. முதலில் இதை திரைக்கு கொண்டு வரலாம் என்று ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் நினைத்தனர். ஆனால் பணிகள் இன்னும் முடிந்தபாடில்லை.
ஆகையால் அதன்பின் ரஞ்சித் இயக்கத்தில் தான் நடித்த காலா படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளனர். "காலா" படத்தின் 95சதவீத பணிகள் முடிந்துள்ளதால் காலா படத்தை முதலில் ரிலீஸ் செய்யுமாறு ரஜினி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.