நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | 'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி |
ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. அவருடன் பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோருடன் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரி, நெல்லை, திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின் ரஜினியும், அமிதாப்பும் இணைந்து நடிக்கிறார்கள். இதனால் இந்த படம் மீது எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இதில் ரஜினி, அமிதாப் இடையேயான காட்சிகள் படமாகி வருகின்றன. படப்பிடிப்பு தளத்தில் இவர்களின் போட்டோக்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.