'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களையும், பல இயக்குனர்களையும் அறிமுகப்படுத்திய சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ரவி அரசு இயக்கத்தில் விஷால், துஷாரா விஜயன் நடிக்கும் விஷாலின் 35வது படத்திற்கு கடந்த ஜுலை மாதம் பூஜை போட்டார்கள். அதன்பின் அப்படத்திற்கு 'மகுடம்' எனப் பெயர் வைத்தார்கள்.
படப்பிடிப்பு ஆரம்பமான சில வாரங்களிலேயே அப்படத்தை ரவி அரசை இயக்க விடாமல் விஷால் இயக்குவதாக ஒரு சர்ச்சை எழுந்தது. ஆனாலும், படத்தின் இயக்குனர் ரவி அரசு சில படப்பிடிப்புக் காட்சிகளைப் பதிவு செய்து வந்ததால் குழப்பம் நீடித்தது.
இந்நிலையில் நேற்று வெளியான அறிவிப்பில் படத்தை விஷால் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். விஷால் இயக்கி வரும் முதல் படம் இது.
ரவி அரசின் உதவி இயக்குனர்கள் சிலருக்கும், விஷாலுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல்தான் இந்த பிரச்சனைக்குக் காரணம் என்கிறார்கள். அதில் சிலரை நீக்கிவிட்டு, விஷால் சிபாரிசின் பேரில் வேறு சிலரை சேர்த்திருக்கிறார்கள். இருந்தாலும் ரவி அரசு, விஷால் இடையிலான சச்சரவு நீடித்துள்ளது.
கடைசியில் பேச்சு வார்த்தை நடத்தி இந்தப் படத்திற்காக அவருக்கு பேசப்பட்ட சம்பளத்தை விடவும் கூடுதலாக ஒரு கோடி சேர்த்து கொடுத்து 'செட்டில்மென்ட்' செய்யப்பட்டுள்ளதாம். அதனால், இயக்குனர் ரவி அரசு விலகலுக்கு சம்மதித்தாராம். இருந்தாலும் படத்தின் கதை என்பதில் அவருடைய பெயரை நீக்காமல் இருக்கவும் முடிவு செய்யப்பட்டதாம்.
இந்த விவகாரம் குறித்து இயக்குனர்கள் சங்கம் ஏதாவது அறிக்கை விடுவார்களா அல்லது சூப்பர் குட், விஷால் என்பதால் அமைதி காப்பார்களா என்பது தெரியவில்லை. இருந்தாலும் விஷால் செய்தது நியாயமா என்று நீக்கப்பட்ட உதவி இயக்குனர்கள் கேட்பதாகவும், அவர்களுக்கு ஆதரவாக சிலர் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.