பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தெலுங்கில் சத்ய தேவ் நடிக்கும் கிருஷ்ணம்மா என்கிற படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரபல தெலுங்கு இயக்குனர்களான ராஜமவுலி, அனில் ரவிபுடி, கொரட்டலா சிவா, கோபிசந்த் மாலினேனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேடையில் அனைவரும் ஒன்றாக நின்ற தருணத்தில் பாலகிருஷ்ணா நடித்த பகவத் கேசரி படத்தை இயக்கிய இயக்குனர் அனில் ரவிபுடி பேசும்போது அருகில் நின்ற இயக்குனர் கொரட்டலா சிவாவிடம் உங்களது தேவரா படம் எப்போது ரிலீஸ் ஆகிறது என்று சொல்ல வேண்டும் என கேட்டார்.
அதேபோல இயக்குனர் ராஜமவுலியை பார்த்து மகேஷ் பாபுவை வைத்து நீங்கள் இயக்கும் படம் முதல் நாள் எப்படி இருக்கும் அது பற்றி நீங்கள் கூற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உடனே ராஜமவுலி ஜாலியாக கூட்டத்தினரை பார்த்து இவரை யாராவது வந்து அடித்தீர்கள் என்றால் அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் தருவேன் என்று கலாட்டாவாக கூறினார். உடனே அனில் ரவிபுடி, அவ்வளவு எதற்கு இரண்டு ரூபாய் கொடுத்தாலே போதுமே என்று தன் தனது பங்கிற்கு காமெடி பண்ணி சமாளித்தார். இதற்கு முன்னதாக மகேஷ்பாபு நடித்த சரிலேறு நீக்கெவரு படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.