சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
சின்னத்திரையில் நடிகராகவும், தொகுப்பாளராகவும் வலம் வந்தவர் கவின். சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் புகழ்பெற்றார். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் வெளியான சத்ரியன் படத்தில் விக்ரம் பிரபுவின் நண்பராகவும், மருத்துவக் கல்லூரி மாணவராகவும் திருநெல்வேலி ஸ்லாங் பேசி நடித்திருந்தார். இதுதவிர விக்ரம் பிரபு நடித்து வரும் மற்றொரு படமான முடிசூடா மன்னன் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இதற்கிடையில் நட்புனா என்னானு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார். கவினுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இவர்கள் தவிர கபாலி நெருப்புடா புகழ் அருண்ராஜா காமராஜ், ராஜூ, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, அழகம் பெருமாள், மன்சூரலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார், தரண் இசை அமைத்துள்ளார். ஷிவ ஆனந்த் இயக்குகிறார். இது நட்பின் சக்தியை காமெடியாக சொல்லும் படம்.