காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு, ஆனந்தராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் கங்குவா. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. அதோடு தமிழ் உள்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதம் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், விரைவில் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சூர்யாவின் மனைவியான நடிகை ஜோதிகா தான் அளித்த ஒரு பேட்டியில், கங்குவா படம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார். அதில், கங்குவா படத்தின் சில காட்சிகளை நான் பார்த்தேன். மிகப்பெரிய பிரமிப்பாக இருந்தது. குறிப்பாக சினிமா உலகமும் சினிமா ரசிகர்களும் முதல் முறையாக ஒரு புதிய வித்யாசமான அனுபவத்தை இந்த கங்குவா படத்தின் மூலம் பெறப்போகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் ஜோதிகா.