வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் |
இளன் இயக்கத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ள படம் 'ஸ்டார்'. டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர், கவின் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கவினுடன் அதிதி போஹன்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார், யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
தற்போது படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மெலோடி' என்கிற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில், கவின் பெண் வேடம் அணிந்து ஆட்டம் போட்டுள்ளார். கல்லூரி கலை விழாவில் அவர் ஆடுவதாக பாடலின் சூழல் அமைந்துள்ளது. தற்போது இந்த பாடல் காட்சி வைரலாக பரவி வருகிறது.