முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் | '2018' பட இயக்குனரின் டைரக்ஷனில் கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகள் | தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு | மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் ? சுரேஷ்கோபி பட சென்சார் சர்ச்சை குறித்து மாநில அமைச்சர் காட்டம் | மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி |
இந்தியாவில் அதிகரித்து வரும் போதை பொருள் புழக்கம், கடத்தல் பற்றி அனைவருமே கவலை கொள்ள ஆரம்பித்துள்ளனர். தற்போது பெண்களும் போதை பழக்கத்திற்கு ஆளாகி வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இந்த நிலையில் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்ட ஒரு பெண்ணின் கதையை 'பெட்டர் டுமாரோ' என்ற பெயரில் சினிமாவாக உருவாக்கி இருக்கிறார்கள்.
'டூ ஓவர்' படத்திற்காக பல விருதுகளை பெற்ற ஷார்வி இயக்குகிறார். மானவ், கவுரி கோபன், பாய்ஸ் ராஜன், ஜெகதீஸ் தர்மராஜ், சைலேந்திர சுக்லா, சரவணன், பி.ஜீ.வெற்றிவேல், யுவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் ஷார்வி கூறும்போது “அதிர்ச்சியூட்டும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட படம் 'பெட்டர் டுமாரோ'. மிகக் கொடூரமான எம்.டி.எம்.ஏ போதைப் பொருளுக்கு அடிமையாக இருக்கும் ஜனனியின் வாழ்க்கையையும், அவள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப, போராடும் அவரது சகோதரர் அரவிந்தின் வாழ்க்கையையும் இப்படம் விவரிக்கிறது. போதைப் பொருளால் உளவியல் பாதிப்புகள் ஏற்பட்ட நபர்களுக்கு தைரியத்தை அளிக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.