பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் |
'ஊமை விழிகள்' படத்தில் இடம்பெற்ற பாடல் வரியை தலைப்பாக கொண்டு உருவாகும் படம் 'நிறம் மாறும் உலகில்'. இந்த படத்தை சிக்னேச்சர் புரொடக்ஷன், ஜிஎஸ் சினிமா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க பிரிட்டோ இயக்குகிறார். தேவ் பிரகாஷ் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பிரிட்டோ கூறும்போது, “நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள், அதை இணைக்கும் ஒரு புள்ளிதான் படம். நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது. பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி என ஒவ்வொருவரும் இதுவரையிலும் அவர்களை பார்த்திராத வகையிலான வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.
நான்கு கதைகளும் வேறு வேறு களங்களில் நடக்கிறது. மும்பை செட் இங்கு தத்ரூபமாக உருவாக்கப்பட்டு அதில் ஒரு கதை, வேளாங்கண்ணி பின்னணியில் ஒரு கதை, சென்னை ஹவுசிங் போர்ட் பின்னணியில் ஒரு கதை, திருத்தணி அருகில் ஒரு கிராமத்தில் ஒரு கதை என பல்வேறு இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. கதைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கலர் டோனில் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிதாக அழகான அனுபவம் தரும் படைப்பாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. என்றார்.