ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ரத்னம்'. இப்படம் இந்த வாரம் ஏப்ரல் 26ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. எந்த ஒரு யு டியூப் சேனல்களில் கூட பிரியாவின் பேட்டிகளைக் காணவில்லை. படத்தின் இயக்குனர் ஹரி, விஷால் ஆகியோர் மட்டுமே பேசி வருகிறார்கள்.
பிரியாவும் அவருடைய சமூக வலைத்தளங்களில் இப்படம் குறித்து எதையும் பதிவு செய்வதில்லை. இப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்தோ, பாடல்கள் வெளியீடு குறித்தோ அவர் கண்டுகொள்ளவேயில்லை. கடைசியாக மார்ச் 29ம் தேதி இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது குறித்து எக்ஸ் தளத்தில் மட்டும் பதிவிட்டுள்ளார்.
'ரத்னம்' படத்தைத் தயாரித்துள்ள ஸ்டோன் பென்ச் நிறுவனம்தான் பிரியா பவானியை 'மேயாத மான்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
'ரத்னம்' பற்றி பிரியா தவிர்க்கிறாரா அல்லது படக்குழு அவரைத் தவிர்க்கிறார்களா என்பது தெரியவில்லை.