அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
தமிழ் சினிமாவை மட்டுமல்லாது இந்திய சினிமாவில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றியவர் ஜூடோ ரத்தினம். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1500 படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றிய இவர், வயது மூப்பு காரணமாக குடியாத்தத்தில் இன்று(ஜன., 26) மாலை 4:30 மணியளவில் காலமானார். சினிமாவில் இவர் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்
உயிரை பணயம் வைத்து, நிஜத்தில் பல சாகசங்கள் புரிந்து திரையில் தோன்றும் கதாநாயக நடிகர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரும் ஸ்டன்ட் கலைஞர்கள் வாழ்க்கை என்பது ஒரு போராட்ட களமானது என்றால் அது மிகையன்று. அப்படிப்பட்ட ஸ்டன்ட் கலைஞர்கள், நம் தென்னிந்திய திரைவானில் கோலோச்சி இருந்தவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடும்படியான ஒருவர் ஜூடோ கேகே ரத்னம். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை பிறப்பிடமாகக் கொண்ட ரத்னம், 08 ஆகஸ்ட் 1930ல் பிறந்தார்.
சினிமா அறிமுகம்
"மகாபாரதம்" மாசிலாமணி என்பவரிடம் தேகப் பயிற்சியையும், தென்னிந்திய பாக்ஸிங் சாம்பியன் பரமசிவன் என்பவரிடம் பாக்ஸிங் பயிற்சியும், ஜி ராமு என்பவரிடம் ஜூடோ பயிற்சியும், தங்கவேலு என்பவரிம் யோகாசனப் பயிற்சியையும் முறையாக கற்று தேர்ச்சி பெற்றிருந்தார்.
முகவை ராஜமாணிக்கம் என்ற திரைப்பட கதாசிரியரின் சிபாரிசின் மூலம் திரைப்பட இயக்குநர் முக்தா வி சீனிவானை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து, அவர் இயக்கிய "தாமரைக் குளம்" என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்றி, ஒரு நடிகராக வெள்ளித்திரைக்கு அறிமுகமானார் ஜூடோ கே கே ரத்னம். 1959 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் எம்ஆர் ராதாவின் உதவியாளராக ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகர் டூ ஸ்டன்ட் இயக்குனர்
பின்னர் இயக்குநர் முக்தா சீனிவாசன் வாயிலாக மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டிஆர் சுந்தரமின் அறிமுகம் கிடைத்து அதன் மூலம், 1963ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த "கொஞ்சும் குமரி" திரைப்படத்திலும் ஒரு நடிகராகவே தோன்றி நடித்த கேகே ரத்னம், 1966ம் ஆண்டு அதே மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில், ஜெய்சங்கர் நாயகனாக நடித்து வெளிவந்த "வல்லவன் ஒருவன்" திரைப்படத்தின் மூலம் ஒரு ஸ்டன்ட் இயக்குநராக அறிமுகப்படுத்தப்பட்டார்.
ஜூடோ ரத்தினம்
ஜூடோ என்ற சண்டை உத்தியை பயன்படுத்தி, தான் பணிபுரிந்த திரைப்படங்களில் சண்டை காட்சிகளை வித்தியாசமானதாகவும், விறுவிறுப்பான சண்டைக் காட்சிகாளாகவும் அமைத்து, அனைத்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றார். இதனடிப்படையில் தமிழ் கலை இலக்கிய மன்றம் இவருடைய பெயருக்கு முன் 'ஜூடோ' பட்டமும் வழங்கியது. அன்றிலிருந்து ஜூடோ கேகே ரத்னம் என்றும் அழைக்கப்பட்டார். குறிப்பாக ஏவிஎம் தயாரிப்பில் ரஜினிகாந்த நடித்த "முரட்டுக்காளை" திரைப்படத்தில், ஓடும் ரயிலில் வில்லன்களோடு ரஜினி மோதும், இவர் அதை திருந்த சண்டைக்காட்சி அன்றும், இன்றும், என்றும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற சண்டைக்காட்சி என்றால் அது மிகையல்ல.
ரஜினிக்கு மட்டும் 46
"முரட்டுக்காளை", "நெற்றிக்கண்", "போக்கிரி ராஜா", "புதுக்கவிதை", "எங்கேயோ கேட்ட குரல்", "பாயும் புலி", "துடிக்கும் கரங்கள்", "சிவப்பு சூரியன்", அடுத்த வாரிசு, "நான் மகான் அல்ல", "தம்பிக்கு எந்த ஊரு", "கை கொடுக்கும் கை", "நல்லவனுக்கு நல்லவன்", "படிக்காதவன்", "மிஸ்டர் பாரத்", "விடுதலை", "மனிதன்", "குரு சிஷ்யன்", "தர்மத்தின் தலைவன்", "ராஜா சின்ன ரோஜா", "அதிசயப்பிறவி", "பாண்டியன்" என ரஜினியின் 46 திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்திருக்கின்றார் ஜூடோ கே கே ரத்னம்.
"சகலகலா வல்லவன்", "தூங்காதே தம்பி தூங்காதே", "ஒரு கைதியின் டைரி", "உயர்ந்த உள்ளம்", "மங்கம்மா சபதம்", "நானும் ஒரு தொழிலாளி", "பேர் சொல்லும் பிள்ளை" போன்ற திரைப்படங்கள் நடிகர் கமல்ஹாசனுக்கு இவர் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து, தனது வித்தியாசமான ஸ்டண்ட் உத்திகளை பயன்படுத்தி ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற திரைப்படங்களாக அறியப்பட்டவை. மேலும் கன்னட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் 52 திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இவர் பணிபுரிந்திருப்பது குறிப்பிடத் தகுந்த ஒன்று.
டாப் நடிகர்களுக்கு வாத்தியார்
தென்னிந்திய திரைவானில் இவர் சண்டை பயிற்றுவிக்காத கதாநாயக நடிகர்களே இல்லை எனும் அளவிற்கு அனைத்து முன்னணி நாயகர்களோடும் பணிபுரிந்த பெருமையும் இவருக்குண்டு. சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், அர்ஜுன், கே பாக்யராஜ், என தமிழிலும், என் டி ராமாராவ், ஏ நாகேஸ்வரராவ், கிருஷ்ணா, சோபன்பாபு, கிருஷ்ணமராஜு, மோகன்பாபு, வெங்கடேஷ் என தெலுங்கிலும், ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், அம்பரீஷ் என கன்னடத்திலும், அமிதாப்பச்சன், தர்மேந்திரா, ஜிதேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி, கோவிந்தா என ஹிந்தியிலும், அத்தனை ஜாம்பவான் நடிகர்களுக்கும் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்து அவர்களுடைய எண்ணற்ற திரைப்படங்களை வெற்றிப் படங்களாக்கியதில் இவருடைய பங்கு அளப்பறியது.
தயாரிப்பாளர்
1960களிலேயே ஸ்டன்ட் மாஸ்டராக அறியப்பட்ட இவர், எம்ஜிஆரின் திரைப்படங்களுக்கு பணிபுரியாமல் போனது துரதிர்ஷ்டமே. ஒரு ஸ்டண்ட் மாஸ்டராக மட்டும் நின்று விடாமல் "ஒத்தையடிப் பாதையிலே" என்ற திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை காட்டிக் காண்டார்.
கடைசிபடம் தலைநகரம்
"தாமரைக் குளம்", "கொஞ்சும் குமரி", "காயத்ரி", "போக்கிரி ராஜா", "நாணயமில்லாத நாணயம்", "பொண்ணுக்கேத்த புருஷன்" போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ஒரு நடிகராகவும் அறியப்பட்ட இவர், 2006 ஆம் ஆண்டு நடிகரும், இயக்குநருமான சுந்தர் சி நடிப்பில் வெளிவந்த "தலைநகரம்" என்ற திரைப்படத்தில் ஒரு வில்லனாக தோன்றி நடித்திருந்ததே இவரது கடைசி திரைப்படம்.
1500 படங்கள்
ஏறக்குறைய தனது 63 ஆண்டுகால இந்த வெள்ளித்திரைப் பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் 1500க்கும் அதிகமான திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக திறம்பட பணிபுரிந்திருக்கும் ஜூடோ கே கே ரத்னம், பல திறமையான ஸ்டன்ட் மாஸ்டர்களையும் இந்த வெள்ளித்திரைக்கு தந்திருக்கின்றார் என்பது தான் உண்மை.
சூப்பர் சுப்பாராயன், விக்ரம் தர்மா, ராம்போ ராஜ்குமார் போன்ற பல திறமையான ஸ்டண்ட் மாஸ்டர்கள் இவரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. "தாமரைக்குளம் டூ தலைநகரம்" என்ற பெயரில் தனது சுயசரிதை புத்தகம்
ஒன்றையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
பயோகிராபி
பெயர் : கே கே ரத்னம்
சினிமா பெயர் : ஜுடோ கே கே ரத்னம்
பிறப்பு : 08 ஆகஸ்ட் 1930
இறப்பு : 26 ஜனவரி 2023
பிறந்த இடம் : குடியாத்தம் - வேலூர் மாவட்டம் - தமிழ்நாடு
மனைவி : பத்மா (இறப்பு) - கோவிந்தம்மாள் (இறப்பு)
குழந்தைகள் : ஜுடோ ராமு - பகவத் சிங் - கோபிநாத் (மகன்கள்) மற்றும் 6 மகள்கள்
விருதுகள்
2013 ஆம் ஆண்டு "கின்னஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்"ல் 1500க்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் சண்டைக் காட்சி ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு "கலைமாமணி விருது" வழங்கி கவுரவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு "சங்கரதாஸ் ஸ்வாமிகள் விருது" வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டன்ட் மாஸ்டராக பணிபுரிந்த முக்கிய தமிழ்த் திரைப்படங்கள்
1. வல்லவன் ஒருவன்
2. இரு வல்லவர்கள்
3. மாடி வீட்டு மாப்பிள்ளை
4. எதிரிகள் ஜாக்கிரதை
5. காதலித்தால் போதுமா
6. தங்க வளையல்
7. முத்துச்சிப்பி
8. தெய்வீக உறவு
9. துலாபாரம்
10. தரிசனம்
11. தங்க கோபுரம்
12. பதிலுக்கு பதில்
13. காசேதான் கடவுளடா
14.ஹோட்டல் சொர்க்கம்
15. காயத்ரி
16. நல்லதுக்கு காலமில்லை
17. மேளதாளங்கள்
18. பஞ்சகல்யாணி
19. முரட்டுக்காளை
20. ஒத்தையடிப் பாதையிலே
21. நெற்றிக்கண்
22. நெஞ்சில் ஒரு முள்
23. சிவப்பு மல்லி
24. போக்கிரி ராஜா
25. சகலகலா வல்லவன்
26. சின்னஞ் சிறுசுகள்
27. தீராத விளையாட்டுப் பிள்ளை
28. கண்ணே ராதா
29. புதுக்கவிதை
30. பக்கத்து வீட்டு ரோஜா
31. எங்கேயோ கேட்ட குரல்
32. தீர்ப்புகள் திருத்தப்படலாம்
33. ஆனந்த ராகம்
34. உருவங்கள் மாறலாம்
35. மலையூர் மம்பட்டியான்
36. ஒரு கை பார்ப்போம்
37. பாயும் புலி
38. தங்கைக்கோர் கீதம்
39. உயிருள்ளவரை உஷா
40. துடிக்கும் கரங்கள்
41. புத்திசாலி பைத்தியங்கள்
42. நான் சூட்டிய மலர்
43. சிவப்பு சூரியன்
44. முந்தானை முடிச்சு
45. வளர்த்த கடா
46. தூங்காதே தம்பி தூங்காதே
47. கைராசிக்காரன்
48. சூரக்கோட்டை சிங்கக்குட்டி
49. அடுத்த வாரிசு
50. மதுரைசூரன்
51. நான் மகான் அல்ல
52. தம்பிக்கு எந்த ஊரு
53. சபாஷ்
54. மகுடி
55. திருப்பம்
56. நெருப்புக்குள் ஈரம்
57. நீங்கள் கேட்டவை
58. நியாயம்
59. நேரம் நல்ல நேரம்
60. கை கொடுக்கும் கை
61. இரு மேதைகள்
62. முடிவல்ல ஆரம்பம்
63. நல்லவனுக்கு நல்லவன்
64. ராஜதந்திரம்
65. நாணயம் இல்லாத நாணயம்
66. படிக்காதவன்
67. ஒரு கைதியின் டைரி
68. அவன்
69. வீட்டுக்காரி
70. கெட்டிமேளம்
71. மாப்பிள்ளை சிங்கம்
72. ரகசியம்
73. நேர்மை
74. பார்த்த ஞாபகம் இல்லையோ
75. யார்?
76. ஒரு மலரின் பயணம்
77. புதிய சகாப்தம்
78. ஈட்டி
79. தெய்வப்பிறவி
80. ராஜா யுவராஜா
81. பாடும் வானம்பாடி
82. உரிமை
83. வெற்றிக்கனி
84. இளமை
85. சிகப்புக் கிளி
86. தலைமகன்
87. உயர்ந்த உள்ளம்
88.மங்கம்மா சபதம்
89. நல்ல தம்பி
90. மூக்கணாங்கயிறு
91. அர்த்தமுள்ள ஆசைகள்
92. சின்ன வீடு
93. எங்கள் தாய்க்குலமே வருக
94. தர்மதேவதை
95. மிஸ்டர் பாரத்
96. குளிர்கால மேகங்கள்
97. காலமெல்லாம் உன் மடியில்
98. முரட்டுக் கரங்கள்
99. மௌனம் கலைகிறது
100. உன்னைத் தேடி வருவேன்
101.கடைக்கண் பார்வை
102. நானும் ஒரு தொழிலாளி
103. ஜீவநதி
104. விடுதலை
105. மனிதன்
106. கூலிக்காரன்
107. சங்கர்குரு
108. அஞ்சாத சிங்கம்
109. எங்க சின்ன ராசா
110. பேர் சொல்லும் பிள்ளை
111. குரு சிஷ்யன்
112. பாட்டி சொல்லைத் தட்டாதே
113. இது நம்ம ஆளு
114. செந்தூரப்பூவே
115. வசந்தி
116. தர்மத்தின் தலைவன்
117. இரண்டில் ஒன்று
118. மணமகளே வா
119. கழுகுமலைக் கள்ளன்
120. மீனாட்சி திருவிளையாடல்
121. திராவிடன்
122. ராஜா சின்ன ரோஜா
123. சொந்தக்காரன்
124. டில்லி பாபு
125. தர்மதேவன்
126. வாய்க்கொழுப்பு
127. என் ரத்தத்தின் ரத்தமே
128. உலகம் பிறந்தது எனக்காக
129. அம்மா பிள்ளை
130. அதிசயப்பிறவி
131. பெண்கள் வீட்டின் கண்கள்
132. புது வாரிசு
133. எங்கிட்ட மோதாதே
134. என் காதல் கண்மணி
135. புதுப் புது ராகங்கள்
136. ஆத்தா நான் பாஸாயிட்டேன்
137. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
138. சகலகலா வாண்டுகள்
139. காவல் கீதம்
140. தெற்கு தெரு மச்சான்
141. முதல் குரல்
142. பாண்டியன்